தேசிய வாக்காளர் தினம்: சேலத்தில் வரும் 21ம் தேதி வினாடி வினா போட்டிகள்

தேசிய வாக்காளர் தினம்: சேலத்தில் வரும்  21ம் தேதி வினாடி வினா போட்டிகள்
X
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி 21.01.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11.00 மணி முதல் 11.15 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம்.

இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதளத்தில் 19.01.2024 தேதிக்குள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். "இந்தியாவில் தேர்தல்கள்" என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடத்தப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 1800-4252 – 1950 என்ற மாநில உதவி மைய எண்ணிலோ, 1950 என்ற மாவட்ட உதவி மைய எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!