சேலத்தில் தேசிய சித்த மருத்துவ தினக் கண்காட்சி துவக்கம்

சேலத்தில் தேசிய சித்த மருத்துவ தினக் கண்காட்சி துவக்கம்
X

ஓமியோபதித்துறையின் சார்பில் 6-வது தேசிய சித்த மருத்துவ தினக் கண்காட்சியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

சேலத்தில் தேசிய சித்த மருத்துவ தினக் கண்காட்சியினை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர்,மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் சேலம் மாவட்ட சித்தமருத்துவத் துறையின் சார்பில் 6வது தேசிய சித்த மருத்துவ தினம் இன்று நடைபெற்றது. தமிழோடும் தமிழர் பண்பாட்டோடும் இரண்டறக் கலந்து, பன்னெடுங்காலமாக மக்களை நோயிலிருந்து காப்பாற்றி வருகிறது சித்த மருத்துவம். சித்த மருத்துவம் சித்தர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டது. சித்தர்களில் தலையாய சித்தராகிய அகத்தியர் அவதரித்த மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தேசிய சித்த மருத்துவ திருநாளாக 2018-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவத்தின் பயன்களை மக்கள் பலரும் அடைந்திடும் வகையில் அனைத்து சித்த மருத்துவ பிரிவுகளிலும் மேம்பட்ட சித்த மருத்துவ சேவையை அரசு வழங்கி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளும், மருந்து மூலப்பொருட்களும் மக்கள் பயன்பெறும் வகையில் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட சித்த மருத்துவ துறையின் சார்பில் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த முடவாட்டுக்கால் பானம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பொது மருத்துவச் சிகிச்சை, வர்ம மருத்துவச் சிகிச்சை, தேரையர் சித்தரின் நோய் கணிப்பு முறையான மணிக்கடை நூல் முறையில் நோய்களை கண்டறிதல், நசியம் சிகிச்சை, கலிக்கம், மூலிகை மற்றும் சித்த மருத்துவ மூலிகைப் பொருட்கள் கண்காட்சி, அனைத்து நோய்களுக்கும் சிறப்பான முறையில் சித்த மருத்துவர்களைக் கொண்டு நோய்களைக் கண்டறிந்து சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.

சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து" எனும் குறிக்கோளினை அடைய தேசிய சித்த மருத்துவ திருநாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இதனைத்தொடர்ந்து, இக்கண்காட்சியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.கு.நெடுமாறன், துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.வனிதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உட்பட சித்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள்

மரு.வி.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டனர்.

Tags

Next Story