கறுப்பு பேட்ஜுடன் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

கறுப்பு பேட்ஜுடன் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
X
ஓமலூரில் உள்ள முஹல்லா மசூதியில் நேற்று மதியம் இஸ்லாமியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து தொழுகை செய்தனர்

சேலம் ஓமலூரில் வக்ப் மசோதாவுக்கு எதிர்ப்பு கறுப்பு பேட்ஜுடன் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

ஓமலூர்: வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 2ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓமலூரில் உள்ள முஹல்லா மசூதியில் நேற்று மதியம் இஸ்லாமியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து தொழுகை செய்தனர்.

அதேபோல், செவ்வாய் சந்தை அருகிலுள்ள ஜாமியா மசூதியிலும் மக்கள் தொழுகையில் கலந்துகொண்டு எதிர்வினை தெரிவித்தனர்.

இது குறித்து ஜாமியா மசூதி நிர்வாகி முகமது கூறியதாவது

புதிய வக்ப் சட்ட திருத்தத்தில் எங்களது உரிமைகளுக்கு எதிரான அம்சங்கள் உள்ளன. இதை எங்களது சமூகம் முழுமையாக எதிர்க்கிறது. வக்ப் சொத்துகள் எங்களுக்கு ஆனந்தமாக பாதுகாக்க வேண்டிய பாரம்பரிய சொத்துகள். எங்கள் முன்னோர்கள் சுட்டிக் காட்டிய வழியில் தான் பாதுகாப்போம். தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறோம், எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகள் ஓமலூர் பகுதியில் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்துகின்றன.

Tags

Next Story