சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திக்.. திக்.. குழந்தையுடன் தாய் மீட்பு பரபரப்பு

சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திக்.. திக்.. குழந்தையுடன் தாய் மீட்பு பரபரப்பு
X

வெள்ளத்திலிருந்து குழந்தையுடன் தாய் மீட்பு பரபரப்பு காட்சிகள்.

சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தையுடன் மீட்பு; காப்பாற்றியவர்களும் தத்தளித்ததால் பரபரப்பு.

சேலம் மாவட்டம், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த தாய் மற்றும் அவரது குழந்தையை மீட்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரி, குளங்கள் ஆகியவற்றில் நீர் நிரம்பிக்காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆணைவாரி நீர்வீழ்ச்சியின் வெள்ளத்தில் தாய் மற்றும் அவரது குழந்தை சிக்கினர். இதனையடுத்து மீண்டு வரமுடியாமல் பாறையின் ஓரம் ஒதுங்கிய நிலையில் உதவி கேட்டு சத்தமிட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கிருந்தவர்கள் அவர்களை சில மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்டனர்.

அப்போது, குழந்தையும் தாயை மேலே கொண்டு சென்ற அவர்களில் இருவர் வெள்ளத்தில் தவறி விழுந்து தத்தளித்தனர். ஆனால், ஒருவழியாக நீந்தி கரைக்கு வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் தற்போது நலமுடன் உள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் திக்.. திக்.. சம்பவத்தால் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!