முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6000 உதவித்தொகை : விண்ணப்பிக்கும் முறை

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6000 உதவித்தொகை : விண்ணப்பிக்கும் முறை
X

சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி

நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில், விளையாட்டுத்துறையில் தேசிய, சர்வதேச போட்டிகளில் வென்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம், 6,000 ரூபாய் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி, www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • குறைந்தபட்ச தகுதி, போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  • உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான விளையாட்டு போட்டியை, மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டி, அகில இந்திய பல்கலைக்கு இடையேயான போட்டியாக இருக்க வேண்டும்.
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட தேசிய, சர்வதேச போட்டி, மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய, சர்வதேச போட்டியாகவும் இருக்கலாம்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு, 2024 ஆகஸ்டு அன்று, 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் மாத வருமானம், 6,000 ரூபாயாக இருக்க வேண்டும்.
  • மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை.

முதியோருக்கான (Veteran / Masters sports meet) விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை. விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in ல் மட்டுமே தங்களது சுய விவரம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதளத்தில் வரும், 30, மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தினம் 1 கேரட்..!  பச்சையாக சாப்பிட்டால் உங்க முகம் பளபளவென மாறிடும் தெரியுமா...? | Carrot benefits in tamil