/* */

கர்நாடகாவில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

கர்நாடகாவில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பு
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதே போல் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் காவிரியில் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு 5 நாட்கள் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் தமிழகத்துக்கு தண்ணீர்திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 57.46 அடியாக குறைந்ததால் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுவதுமாக தெரிகிறது. மேலும் கிறிஸ்துவ கோபுரமும் முழுமையாக தெரிய தொடங்கியது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 10 ஆயிரத்து 306 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 22.83 டி.எம்.சி. நீர் இருப்பு மட்டுமே உள்ளது.

Updated On: 8 Aug 2023 4:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்