மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து சரிவு
X
Mettur Dam Today News in Tamil - மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

Mettur Dam Today News in Tamil - காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் மாலை 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 40 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து இன்று காலை 30 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 7 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!