மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலரைக் கொல்லமுயற்சி கொலையாளிகள் தப்பி ஓட்டம்
கவுன்சிலரை கொல்ல முயற்சி நடந்த நகராட்சி ஆபீசின் முகப்பு தோற்றம்
mettur municipal meet, murder attempt
மேட்டூர் நகராட்சி ஆபீசில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கவுன்சிலரைக் கொலையாளிகள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
mettur municipal meet, murder attempt
மேட்டூர் நகராட்சி ஆபீசில் கொலை முயற்சி நடந்ததால் அச்சத்தில் பணியாளர்கள் வெளியே நிற்கின்றனர்.
mettur municipal meet, murder attempt
மேட்டூர் பொன்நகர் குள்ளவீரன் பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). இவர் தற்போது 14வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஷ்வரி.முதலாவதுவார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நடக்க இருந்த மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கணவன் மனைவி இருவரும் அவர்களது காரில் வந்து நகராட்சிஅலுவலகத்தில் உள்ளே நுழைந்தனர். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் காரில் இருந்து இறங்கிய வெங்கடாஜலத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போதுஅங்கிருந்து தப்பி ஓடி நகராட்சி வரிவசூல் செய்யும் அறைக்குள் ரத்த காயங்களுடன்வெங்கடாஜலம் புகுந்து கொண்டார்.
அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதை அடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இந்தசம்பவம் பற்றிய தகவல் அறிந்து மேட்டூர் பொறுப்பு டி.எஸ்.பி,சண்முகம் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு தீவிர சிகிச்சைக்காக அவர் அனுப்பப்பட்டார்.
mettur municipal meet, murder attempt
கொலை முயற்சி நடந்ததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
mettur municipal meet, murder attempt
இந்த சம்பவம் குறித்து மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் கூறும் போது கவுன்சிலர் வெங்கடாசலத்தை வெட்ட வந்த நபர்களைத் தேடி வருகிறோம். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? உள்ளிட்ட விசாரணையை செய்து வருகிறோம். மேலும் வெட்டப்பட்ட வெங்கடாசலம் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட நான்கு வழக்குகள் இருந்தன. இதில் மூன்று வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.மேலும்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த கொலை சம்பவத்தால் மேட்டூர் நகராட்சி அலுவலகமே நேற்று பிற்பகல் முதல் பரபரப்பாக காணப்பட்டது. நகராட்சி கூட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது மட்டுமல்லாமல் அலுவலக பணிகளும் இதனால் பாதிப்படைந்தது.
mettur municipal meet, murder attempt
மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாஜலம் மற்றும் அவரது மனைவி இருவரும் வந்த கார்..
mettur municipal meet, murder attempt
நகராட்சி தலைவர் சந்திரா, கமிஷனர் புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் நகராட்சி அலுவலகத்திலேயே முகாமிட்டிருந்தனர். மேட்டூர் நகராட்சிவரலாற்றில் இதுபோல ஒரு சம்பவம் இதுவரையில் நடைபெறவில்லை. மேட்டூரில் ரெளடிகள் அட்டகாசம் தற்போது மீண்டும் தலைதூக்கி விட்டது. சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் புகுந்து சிகிச்சை பெற்று வந்த நபரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது நகராட்சி அலுவலகத்தில் புகுந்து கொலை முயற்சி நடந்துள்ளதால் மேட்டூர் நகர பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கவுன்சிலரைக் கொல்ல முயன்ற கும்பல் தப்பி ஓடியுள்ளதால் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். போலீஸ்துறையானது மேட்டூரில் பாதுகாப்பினை பலப்படுத்துவதோடு ரோந்து போலீசாரை அதிக அளவில் பணியமர்த்தவேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu