சேலம் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

சேலம் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்
X

கொண்டநாயக்கன்பட்டி சத்யா நகர், முனியப்பன் கோவில் பகுதியில்  கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் 149 குழுக்கள் மூலம் சுமார் 6 லட்சம் பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 149 குழுக்கள் மூலம் சுமார் 6 லட்சம் பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், கொண்டநாயக்கன்பட்டி சத்யா நகர், முனியப்பன் கோவில் பகுதியில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் அனைத்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

கோமாரி நோய் தடுப்புசி போடும் பணியினை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர், சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையமும் சேர்ந்து 01.03.2023 இன்று முதல் வரும் 21.03.2023 வரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக கோமாரி நோய்க்கான 3-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோமாரி நோயானது இரட்டைக் குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் ஓர் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் மற்ற கால்நடைகளுக்கு எளிதில் பரவுகிறது.

கோமாரி நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கால் மற்றும் வாய் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 21.03.2023 வரை அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் 149 குழுக்கள் மூலம் நான்கு மாத வயதுக்கு மேற்பட்ட சுமார் 6 லட்சம் பசு மற்றும் எருமைகளுக்கு அந்தந்த ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தக பகுதிகளில் மூலம் முன் கூட்டியே தக்க விளம்பரம் செய்து கோமாரி நோய்க்கான 3-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தடுப்பூசி போடப்படும் நாளில் தவறாது கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் புருசோத்தமன், துணை இயக்குநர் சாந்தி, உதவி இயக்குநர் மரு.ராஜா, .பாபு கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுவாமிநாதன், துணை தலைவர் கேசவன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil