சேலம் மாவட்டத்தில் 3ம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் 3ம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள்
X

பைல் படம்

சேலம் மாவட்டத்தில் 13வது நாளான 3ம் தேதி 9 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன.

"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 13வது நாளான வரும் 3ம் தேதி, 8 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது :

"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் "மக்களுடன் முதல்வர்" "இல்லம் தேடி சேவை"என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீர்மிகு இத்திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சிறப்புடன் செயற்படுத்திட 18.12.2023 முதல் 06.01.2024 வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்களை நடத்த 142 உரிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, சீரிய முறையில் நடத்திட முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் (INCHARGE OFFICERS) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில் செயல்படும் வழக்கமாக இ-சேவை மையங்களில் பெறப்படும் சேவைக்கட்டணத்தில் 50% மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். இந்த முகாமானது முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரை செயல்படும். முகாமின் போது பெறப்படும் மனுக்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 13வது நாளான 03.01.2024, புதன்கிழமை அன்று சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் வார்டு பகுதிக்குட்பட்டவர்களுக்கு ராஜேந்திர சத்திரம் மாநகராட்சி கட்டிடத்திலும், அம்மாபேட்டை வார்டு 41 பகுதிக்குட்பட்டவர்களுக்கு பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறத்தில் அமைந்துள்ள முத்துமஹாலிலும், அஸ்தம்பட்டி வார்டு 31 பகுதிக்குட்பட்டவர்களுக்கு ஜலால்கான் தெரு பகுதியில் அமைந்துள்ள கோட்டை சமுதாயக் கூடத்திலும், கொண்டலாம்பட்டி வார்டு 57 பகுதிக்குட்பட்டவர்களுக்கு கருங்கல்பட்டி இட்டேரி ரோட்டில் உள்ள எஸ்.எஸ் மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேலும், தாரமங்கலம் நகராட்சி, தாரமங்கலம் வார்டு 19, 20, 21, 27 ஆகிய பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு செங்குந்தர் திருமண மண்டபத்திலும், இடங்கணசாலை வார்டு 3, 4, 5, 6, 7 ஆகிய பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு கோவில் திருமண மண்டபத்திலும், வீரக்கல்புதூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்டவர்களுக்கு ராமன்நகர் சமுதாயக் கூடத்திலும், ஏத்தாப்பூர் பேரூராட்சிப் பகுதிக்குட்பட்டவர்களுக்கு சித்தர் சமுதாயக் கூடத்திலும், சேலத்தாம்பட்டி கிராம பகுதிக்குட்பட்டவர்களுக்கு சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் என மொத்தம் 9 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் 142 இடங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, உரிய விளம்பரம் நகராட்சி நிருவாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையால் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாட்களை அறிந்து முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளைப் பெற்று பொதுமக்கள் பயனடைய வேண்டுமாய் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!