ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நிலம் வாங்க கடனுதவி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நிலம் வாங்க கடனுதவி
X
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சார்ந்தவர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடனுதவி பெற்றுப் பயனடையலாம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சார்ந்தவர்கள் தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடனுதவி பெற்றுப் பயனடையலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாகப் பெற்று வழங்கப்படுகிறது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத் தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக்கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6% மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ மூலம் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TAHDCO) 1974 இல் நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் கழகத்தின் பங்கு மூலதனத்தில் பங்களிக்கின்றன. தற்போது கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.200.00 கோடி மற்றும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ.147.11 கோடி. மாநில அரசு. மற்றும் மத்திய அரசு 51:49 என்ற விகிதத்தில் பங்கு மூலதனத்தை பங்களிக்கவும்.

1974ல் கார்ப்பரேஷன் கட்டுமான நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டாலும், மாநிலத்தில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வருமானம் ஈட்டுவதற்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைப் பரந்த அளவில் மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டன.

கழகத்தின் முக்கிய செயல்பாடுகள்

மாநிலத்தில் பட்டியலினம் / எஸ்டி நலனுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல்.

பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை / சுய வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல்.

அரசால் ஒப்படைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

அமைப்பு

TAHDCO இல் நிர்வாக இயக்குனரின் தலைமையில் இரண்டு செயல்பாட்டு பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத் தலைமையகத்திலும் 38 அலுவலகங்களைக் கொண்ட வளர்ச்சிப் பிரிவு.

சென்னை (2 பிரிவுகள்), விழுப்புரம், வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 10 பிரிவுகளைக் கொண்ட கட்டுமானப் பிரிவு செயல்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!