போன் செய்தால் போதும், வீடு தேடி வரும் சரக்கு, அதிர்ந்த போலீசார்

போன் செய்தால் போதும்,  வீடு தேடி வரும் சரக்கு, அதிர்ந்த போலீசார்
X

பைல் படம்

போன் செய்தால் டாஸ்மாக் மதுபானங்களை வீடுகளுக்கே சென்று கொடுக்கும், சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தெனனங்குடிபாளையம் பகுதியில் குடிமகன்களுக்கு மொபைல் எண்ணை வழங்கும் சாராய வியாபாரிகள்,

அரசின் டாஸ்மாக் மதுபானங்களை மொத்தமாக வாங்கி, மொபைல் ஆர்டர் கொடுப்பவரின் வீடுகளுக்கு டூவீலரில் மது பாட்டில்களை கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்வதாக, சேலம் மாவட்ட எஸ். பி அபிநவ்விற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத னையடுத்து அவரின் உத்தரவின் பேரில் எஸ். பியின் தனிப்படை போலீசார், தென்னங்குடிபாளையம் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

அப்போது மொபட்டில் வந்த ஒரு நபரை சந்தேகததின் பேரில் சோதனையிட்டனர். அவரிடம் மொபைல் ஆர்டருக்கு விற்பனை செய்ய 200 குவார்ட்டர் மதுபான பாட்டில் கொண்டுசென்ற தெரியவந்தது.

விசாரணையில் வாழப்பாடி அடுத்த சின்னகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (37) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மொபட் உடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், முருகனை கைது செய்து ஆத்தூர் ரூரல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மொபைல் போன் ஆர் டர் மூலம் 24 மணி நேரம் வீடுகளுக்கே சென்று மது பானம் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story