/* */

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டி: ஆட்சியர் தலைமையில்ல ஆலோசனை

ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகளின் கொம்புகளில் ரப்பர் காப்புகளை அணிவிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டி: ஆட்சியர் தலைமையில்ல ஆலோசனை
X

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று (12.01.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது மாடுகளின் கொம்புகளில் மாடுபிடி வீரர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ பாதிப்பு ஏற்படாதவாறு கொம்புகளில் ரப்பர் காப்புகளை அணிவித்தல் வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று (12.01.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு பிராணிகள் வதை தடுப்புச்சட்டம் (ஜல்லிக்கட்டு) விதிகள் 2017- க்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் 2014 நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் காளையின் உரிமையாளர்கள் அதன் விவரங்களை நிகழ்ச்சிக்கு முன்னர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் இரண்டு வயதிற்கு மேற்பட்டதாகவும், 120 செமீக்கு மேல் இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், நல்ல உடல்நிலையை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். மாடுபிடி வீரர்களும் நிகழ்ச்சிக்கு முன்னர் மேற்கண்ட இணையத்தளத்தில் தங்கள் பெயர்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

காளைகளை ஜல்லிக்கட்டு விழாவிற்கு கொண்டு செல்லும் போது பாதுகாப்பான முறையில் விதிகளுக்கு உட்பட்டு கொண்டு செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது காளைகளுக்கு ஊக்க மருந்துகள் கொடுப்பதோ, கண்களில் மிளகாய் பொடி தூவுதல், கூரிய கருவிகள் கொண்டு துன்புறுத்துதல் மற்றும் ஊறுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

மேலும், மாடுகளின் கொம்புகளில் மாடுபிடி வீரர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ பாதிப்பு ஏற்படாமல் கொம்புகளில் ரப்பர் காப்புகளை அணிவித்தல் வேண்டும். மாடுபிடி வீரர்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாடுபிடி வீரர்கள் ஊக்க மருந்தோ, போதைபொருட்களை உட்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்களா அலுவலர்களுக்கு என்பதையும் கண்காணிக்க அவேண்டுமென றிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்போது வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, சேலம் மாநகர காவல் துணை ஆணையர்கள் பிருந்தா, மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது ஜெகநாதன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் பாபு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Jan 2024 4:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?