வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் ஓராண்டு வேளாண் விரிவாக்க சேவைக்கான பட்டயப் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ், சுயநிதிமுறையில் படிப்பதாக இருந்தால் ரூ.20,000/-மும், மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதி மூலமாக பயில்வதாக இருந்தால் ரூ. 10,000/- மும், வேளாண் விற்பனை நிறுவனங்கள் மூலமாக படிப்பதாக இருந்தால் அந்நிறுவனம் ரூ. 10,000/- மும், மீதமுள்ள ரூ. 10,000/- மத்திய அரசு மற்றும் இடுபொருள் விற்பனையாளரும் தலா ரூ. 5,000/- வீதம் படிப்புத் தொகையாக கட்டவேண்டும்.
இந்தப் படிப்பு, வாராந்திர வகுப்புகளாக அதாவது வாரந்தோறும் சனி (அ) ஞாயிறு (அ) விற்பனை விடுமுறை நாளன்று பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படும். ஒரு அணிக்கு கட்டாயம் 40 நபர்கள் இருக்கவேண்டும். மொத்தம் 48 நாட்களில் 40 நாட்கள் (80 வகுப்பறை வகுப்புகளும்), 8 நாட்கள் கண்டுணர்வு வகுப்புகளும் நடத்தப்படும்.
மேலும், விவரங்களுக்கு திட்ட இயக்குநர் (அட்மா)/ வேளாண்மை இணை இயக்குநர், நெ.1, செரி ரோடு, திருவள்ளுவர் சிலை அருகில், சேலம்- 636 001 என்ற அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும் https://www.manage.gov.in/daesi/guidelines.pdf என்ற இணையதள முகவரியிலும் அறிந்து பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu