கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்ததாக அரசு பெண் மருத்துவா்களிடம் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை

கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்ததாக அரசு பெண் மருத்துவா்களிடம்  மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை
X
அயோத்தியாப்பட்டணம் அருகே ஸ்கேன் பரிசோதனை செய்து கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்ததாக அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் : அயோத்தியாப்பட்டணம் அருகே ஸ்கேன் பரிசோதனை செய்து கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்ததாக அரசு பெண் மருத்துவர், செவிலியர்களிடம் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு இடைத்தரகர்கள் வாயிலாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே வீராணம் கோழிப் பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்கேன் பரிசோதனை மையத்தில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி மற்றும் மருத்துவத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமையில் ஆய்வு

இதையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் உத்தரவின் பேரில், வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வீராணம் பகுதியில் தனியார் ஸ்கேன் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கு இடைத்தரகர்கள் வாயிலாக கர்ப்பிணிகளிடம் தலா ரூ.15,000 வரை கட்டணம் பெற்றுக் கொண்டு கருவில் இருக்கும் பாலினம் குறித்து தெரிவிப்பது தெரியவந்தது.

ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் கருவிகள் பறிமுதல்

இதையடுத்து, ஸ்கேன் பரிசோதனை மையத்தில் இருந்த ஆவணங்கள், ஸ்கேன் பரிசோனை கருவிகளை பறிமுதல் செய்த மருத்துவக் குழுவினர், ஆச்சாங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் முத்தமிழ், தெடாவூரைச் சேர்ந்த செவிலியர் கலைமணி, சேலத்தைச் சேர்ந்த செவிலியர் அம்பிகா உள்ளிட்டோரிடம் சேலம் மாவட்ட மருத்துவத் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!