இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூன் 3ம் தேதி 8ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்ஐஎம்சி தேர்வு

இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூன் 3ம் தேதி 8ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்ஐஎம்சி தேர்வு
X

பைல் படம்.

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 8ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்ஐஎம்சி தேர்வு நடைபெறவுள்ளது.

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேருவதற்கான ஆர்ஐஎம்சி (RIMC) தேர்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது. டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) எட்டாம் வகுப்பில் சேருவதற்கான ஆர்ஐஎம்சி (RIMC) தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் 2023 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 03-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.

இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம் கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01.06.2024 அன்று 11 1/2 வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02.01.2011-க்கு முன்னதாகவும் 01.07.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்ககூடாது. மேலும் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்திலும், முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 0427-2902903 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil