மேட்டூர் அணையில் நீர்வரத்து 1,562 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை.
கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியு்ளளது. காவிரி கரையோர பகுதிகளில் தற்போது மழை குறைந்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,422 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 1,410 கன அடியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 1,562 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 102.79 அடியாகவும், நீர் இருப்பு 68.50 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை, நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.76 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 20.37 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 441 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 40.45 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 7.22 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 62 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu