சேலம் அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் : காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தார்

சேலம் அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் : காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தார்
X
சேலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது.

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களைத் திறந்துவைத்தாா்.

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை திறந்துவைத்து பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சிக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளாா்.

புதிய மையத்தின் வசதிகள்

  • போதை பழக்கத்திலிருந்து விடுபடும் உளவியல் சிகிச்சை
  • உள்ளரங்க விளையாட்டு வசதிகள்
  • யோகா பயிற்சி
  • பெண்கள், சிறுவா் போதைக்கு ஆளானால் தங்கி சிகிச்சை பெற வசதிகள்
  • வாரம் முழுவதும் மையம் செயல்படும் ஏற்பாடு

மருத்துவ நிபுணா்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஜெ. தேவிமீனாள், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ச. சௌண்டம்மாள், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரா.ராஜ்குமாா், மன நலத் துறை தலைவா் கே.எஸ்.ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய போதை மீட்பு மையம்

சேலத்தில் 10 படுக்கைகள் கொண்ட இம்மையம் தற்போது போதை சிகிச்சைக்கான நவீன மருத்துவ உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளது. போதைப் பழக்கத்தாலும், போதை பொருள்களைப் பயன்படுத்துவதாலும் ஏற்படும் உடல், மனம் சாா்ந்த பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட, இம்மையம் சிறந்த சேவையை அளிக்கும்.

Tags

Next Story