இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆலோசனை கூட்ட

இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறவுள்ள தேர் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் வளாகத்தில் செயல் அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடுத்த மாதம் 2 முதல் 14 வரை தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தின்போது, கடந்த ஆண்டு தேர் திருவிழா நடத்திய விழா குழுவினர் முறையான வரவு-செலவு அறிக்கையை கொடுக்க வேண்டும் என கேட்டு சிலர் வாக்குவாதம் செய்தனர். அதேபோல் திருவிழாவில் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க தனியே ஏலம் விட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆனால் இறுதியில், ஏலம் விடாமல் விழா குழுவினரே கட்டணம் நிர்ணயித்து கடைக்காரர்களை அனுமதிப்பது என்றும், கடந்த ஆண்டு நடந்த விழா குழுவின் வரவு-செலவு கணக்கை இந்த ஆண்டு திருவிழா முடிந்தவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu