சிலம்பம் போட்டியில் ஹெரிடேஜ் பள்ளி மாணவிகள் சாதனை

சிலம்பம் போட்டியில் ஹெரிடேஜ் பள்ளி மாணவிகள் சாதனை
X
வெற்றி மாலை ஹெரிடேஜ் பள்ளி மாணவிகள் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்

சிலம்பம் போட்டியில் ஹெரிடேஜ் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்

சேலம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில் வாழப்பாடியை அடுத்த கவர்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனர். முத்தம்பட்டி வைகை மெட்ரிக் பள்ளியில் வாரறையடி சிலம்பம் அகாதெமி நடத்திய மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான சிலம்பம் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் அண்மையில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் 2 முதல் பரிசுகள், 2 இரண்டாம் பரிசுகள் மற்றும் 2 மூன்றாம் பரிசுகளையும், 10 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் முதல் பரிசும் வென்றுள்ளனர். சிலம்பம் தற்காப்புக் கலைப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாளாளர் சு.பெருமாள், முதல்வர் சக்திவேல், துணைத் தலைவர் கண்ணன் பெருமாள் ஆகியோர் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினர்.

Tags

Next Story
ai for business microsoft