சேலம் மாவட்டத்தில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டத்தில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக 100 டிகிரியை தாண்டி வெயிலின் அளவு பதிவானதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். நேற்று பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அஸ்தம்பட்டி, நான்கு ரோடு, அன்னதானப்பட்டி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலு் இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

அதேபோல் எடப்பாடி பகுதியில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை கனமழையாக கொட்டி தீர்த்தது. எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிங்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளி பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. கோடை வெப்பத்தினால் அவதிக்குள்ளான மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை தந்தது.

தேவூர், அம்மாபாளையம், காணியாளம்பட்டி, அண்ணமார்கோவில், புதுபாளையம், சென்றாயனூர் காவேரிப்பட்டி, மேட்டுப்பாளையம் செட்டிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, குஞ்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. தேவூர் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீரகனூர் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வீரகனூர், திட்டச்சேரி நல்லூர், கவர்பனை, கிழக்கு ராஜாபாளையம், லத்துவாடி, ராயர்பாளையம், வி. ராமநாதபுரம் ஆகிய கிராமங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story