குடிநீர் வழங்கலுக்கு முக்கியத்துவம் – அமைச்சர் ராஜேந்திரன் ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

குடிநீர் வழங்கலுக்கு முக்கியத்துவம் – அமைச்சர் ராஜேந்திரன் ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
X
ஊராட்சி பகுதியில் குப்பை அகற்றுதல்! குடிநீர் விநியோகத்தில் காலநிர்வாகம் – அமைச்சர் அறிவுறுத்தல்

மக்களுக்கு சீரான குடிநீர்: அமைச்சர் அறிவுறுத்தல்

சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

அமைச்சர் தனது உரையில், "கோடை காலம் தொடங்கிய நிலையில், குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணிபுரிய வேண்டும்" என்று வலியுறுத்தினார். மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், ஊராட்சிகளில் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் தெருக்களில் குப்பைகள் சேராதவாறு துய்மைப்பணியாளர்கள் மூலம் தினமும் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு குறிப்பிட்ட கால அளவில் முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future