மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்
X

பைல் படம்.

Salem News Today: மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு வரும் 4ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

Salem News Today: மத்தியப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 4ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் SSC CGL தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.052023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) 7500 -ற்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசிநாள் 03.05.2023 ஆகும்.

இத்தேர்விற்கான கல்வித்தருதி, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் 01.08.2023 அன்றைய நிலையில் எஸ்.சி.எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக ரூ.100/ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள். எஸ்.சி எஸ்.டி. வருப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.052023 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இந்தேர்விற்கு விண்ணப்பித்து, இவைசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story