போலீஸ் எஸ்.ஐ மகன் தூக்கிட்டுத் தற்கொலை

போலீஸ் எஸ்.ஐ மகன் தூக்கிட்டுத் தற்கொலை
X

Salem News,Salem News Today-எடப்பாடி அருகே, போலீஸ் எஸ்.ஐ மகன் தற்கொலை (கோப்பு படம்)

Salem News,Salem News Today-எடப்பாடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை பிறந்த நாளில் இந்த துயரம் நடந்துள்ளது.

Salem News,Salem News Today - எடப்பாடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சி கூடக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவருக்கு குமுதா என்ற மனைவியும், ஜீவபாரதி (வயது 21), கவின் ஆகிய மகன்களும் இருந்தனர். ஜீவபாரதி திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு நேற்று பிறந்த நாள். இதனால் அவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டார். வீட்டில் ஜீவபாரதி மற்றும் அவருடைய தம்பி கவின் ஆகியோர் இருந்தனர்.

அப்போது, திடீரென ஜீவபாரதி தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். பின்னர் அவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவின், கதவை திறந்து பார்த்தார். அப்போது ஜீவபாரதி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கவின், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜீவபாரதியை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஜீவபாரதியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே, அவர் இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் குடும்ப பிரச்னை காரணமாக ஜீவபாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தை பிறந்த நாளில் மகன் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!