சுற்றுலா விடுதி கட்ட எதிர்ப்பு! பொதுமக்கள் சாலைமறியல்!

சுற்றுலா விடுதி கட்ட எதிர்ப்பு! பொதுமக்கள் சாலைமறியல்!
X
எடப்பாடி அருகே சுற்றுலா பயணிகள் ஓய்வு விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி அருகே சுற்றுலா பயணிகள் ஓய்வு விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அமைந்துள்ள பூலாம்பட்டி. இது காவிரிக்கரையில் அமைந்துள்ளதால் சுற்றுலாவுக்கான பிரமாதமான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்கிச் செல்லும் வகையிலான ஓய்வு விடுதி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் ஓய்வு விடுதி கட்ட 2 கோடியோ 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்தது.

இந்நிலையில், நேற்று சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள், புதிய கட்டமானங்கள் அமைய இருக்கும் பூலாம்பட்டி காவிரிக் கரை பகுதியில் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு பணிகளைத் தொடங்கினர்.

தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த பகுதியில் கூடி திடீரென போராட்டம் செய்வதாக கூறி சாலையில் அமர்ந்தனர். புதிய கட்டுமானப் பணியினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி எடப்பாடி- மேட்டூர் முக்கிய சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிப்புக்குள்ளானது.

தகவல் அறிந்த உள்ளாட்சி அலுவலர்கள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு தற்காலிகமாக அந்த பகுதியில் பணிகள் நடைபெறாது என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்