சேலத்தில் மர்மமான முறையில் வீட்டிற்குள் சடலமாக கிடந்த டாக்டர்

சேலத்தில் மர்மமான முறையில் வீட்டிற்குள் சடலமாக  கிடந்த டாக்டர்
X

பைல் படம்

சேலத்தில் டாக்டர் ஒருவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் நகரமலை அடிவாரப் பகுதியில் கோல்டன் வேல்யூ குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ரங்கநாதன் (வயது 45) என்பவர் வசித்து வருகிறார். ரங்கநாதன் சேலம் மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவியும் பல் டாக்டராக பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுவரை இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ரங்கநாதனின் மனைவி மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சேலத்தில் உள்ள தனது தாயின் வீட்டில் ரங்கநாதன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர், வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அவர் தூங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய், தூங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது ரங்கநாதன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். அருகில் சென்று பார்த்த போது, அவரது வாயில் ரத்தம் வடிந்தநிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அழகாபுரம் போலீசார், ரங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல் டாக்டரின் மர்ம உயிரிழப்பு குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!