சேலத்தில் வரும் 7ம் தேதி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலத்தில் வரும் 7ம் தேதி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
X

பைல் படம்

Salem News Today - சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது.

Salem News Today - அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் 07.06.2023 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 07062023 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையிலும், சென்னை. ஓய்வூதிய இயக்குநரகம், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் 30.05.2023 செவ்வாய்கிழமை மாலை 05.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) (அறை எண்.123) அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இந்த வாய்ப்பினை ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!