/* */

வேளாண் அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, குறைதீர்வு குழுக்கூட்டம்

வேளாண்மைத் துறையின் அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் குறைதீர்வு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

வேளாண் அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, குறைதீர்வு குழுக்கூட்டம்
X

வேளாண்மைத் துறையின் அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் குறைதீர்வு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், வேளாண்மைத் துறையின் அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் குறைதீர்வு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டிற்குரிய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்ட செயல்பாடுகள் முந்தைய வருடங்களின் பயிர் காப்பீட்டு நிலுவை விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்தின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தில் விசைத் தெளிப்பான்கள் சிற்பம் கட்டும் அறை அமைத்தல், நிழல் வளை கூடாரம் அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், உயர் தொழிற்நுட்ப நாற்றங்கால் உள்ளிட்டவைகள் விவசாயிகளுக்கு அமைத்திட வழங்கப்பட்ட மானிய தொகை விவரங்கள் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வட்டார வாரியாக தோட்டக்கலைப் பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க வரப்பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு ஆழ்துளை கிணறு, மின் மோட்டார், பைப் லைன் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்திட வரப்பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்பட்ட பணி ஆணைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவரும் சூழ்நிலையில் விவசாயிகள் தங்களது மா, வாழை, எலுமிச்சை மற்றும் கொடிவகை காய்கறிகளை வெயில் பாதிப்பில் இருந்து பாதுகாத்திட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் ஒருங்கிணைந்த மேலாண்மை வழிமுறைகளைப் பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது. அந்தவகையில், திரவ உயிர் உரங்களான அசோஸ் பைரிலம், பாஸ்போ பேக்டீரியா ஆகியவைகளை இலை வழியாக தோட்டக்கலைப் பயிர்களுக்கு வழங்குவதால் பூ, பிஞ்சு ஆகியவை உதிர்தல் தடுக்கப்பட்டு மற்ற பருவ காலங்களைப் போன்றே கோடை காலங்களிலும் மகசூல் கிடைத்திட வழிவகுக்கும்.

மேலும், தோட்டக்கலைப் பயிர்களின் அடிபாகத்தில் இயற்கையான முறையில் இலை தழைகளை அனைப்பதன் மூலம் கோடை வெயிலால் மண்ணில் சூடு தாக்காமல் குறைந்து இதமான தட்ப வெப்ப நிலை நிலவச் செய்யும். மற்றும் கோடை காலத்தில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சுதல் மற்றும் சொட்டு நீர் முறைகளைக் கையால்வதன் மூலம் சராசரி மகசூலை விவசாயிகள் பெற வாய்ப்பாக அமையும். மேலும், கோடை கால பயிர் மேலாண்மை வழிமுறைகள் குறித்து அறிந்துகொள்ள அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்செல்வி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைச்செல்வி உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் வேளாண் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 13 April 2023 2:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்