சேலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா
சேலம், இந்திய மருத்துவச் சங்கம் கூட்டரங்கில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
சேலம், இந்திய மருத்துவச் சங்கம் கூட்டரங்கில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டப் பணிகள் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமைதாங்கி பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் ஊட்டச்சத்து இயக்கத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள 22 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூலங்கள் மற்றும் 5 வகை உணவுகள் வழங்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 கொள்கைகளை முன் வைத்தார்கள். அதில் சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நகரங்களில் 700 க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய மருத்துவமனைகளை தொடங்கி இருக்கிறார்கள். தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு நகரத்திலும் 30 முதல் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் 1 மருத்துவர் 5 செவிலியர்கள் என்ற வகையிலே அந்த மருத்துவமனையினை தொடங்கி உள்ளார்கள்.
மேலும், மருத்துவமனைகள் மாவட்ட அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளெல்லாம் புதிதாக கட்டடம் கட்டி அனைத்து சிகிச்சைகளும் ஓரிடத்தில் கிடைக்கப்பெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடப்பாண்டில் 35 இடங்களில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
சமூக நலத்துறையின் சார்பில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி விரிவுபடுத்தி நடத்தப்படுகிறது. இதன் மூலம் கர்ப்ப காலத்திற்கு பின் பிறக்க கூடிய குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய வழிமுறைகளையும் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனவே இவ்விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தைகளை பெற்றெடுத்து வளமுடன் வாழ்ந்து அக்குழந்தைகள் நல்ல முன்னேற்றத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், சேலம் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் ந.பரிமளா தேவி, உள்ளாட்சி அமைப்புகளின் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu