தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுகளுக்கான கருத்துருக்கள் வரவேற்பு

தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுகளுக்கான கருத்துருக்கள் வரவேற்பு
X

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்.

தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுகளுக்கான கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான்.

நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல்வேறு விருதுகளும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படவுள்ள பல்வேறு விருதுகளுக்கான கருத்துருக்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் மேலாண்மை, வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு, தகவல் தொழில்நுட்ப முயற்சிகள், பாதுகாப்பு மேலாண்மை, வாக்காளர் பட்டியல் மேலாண்மை, புதுமையான நடவடிக்கைள், அணுகக்கூடிய தேர்தல்கள், தேர்தல் எழுத்தறிவு கழகங்கள் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றும் தகுதி வாய்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறை கண்காணிப்பாளர், தேர்தல் பங்கேற்பை மேம்படுத்தும் துறை / நிறுவனங்கள் / பொதுத்துறை நிறுவனங்களுக்கு சிறந்த தேர்தல் நடைமுறை விருதுகள், வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய CSO விருது, அரசாங்கத்திற்கான தேசிய விருது 2022 தேசிய வாக்காளர் தினத்தன்று (ஜனவரி 25) பாராட்டு பத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

சிறந்த தேர்தல் நடைமுறைக்கான 2022 விருதில் பொதுப்பிரிவு விருது - தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. சிறப்புப்பிரிவு விருது தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / காவல் கண்காணிப்பாளர்கள் தவிர மற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த மாநில விருது - தேர்தல் மேலாண்மை துறைகளில் சிறந்த ஒட்டுமொத்த திறனை வெளிப்படுத்தும் மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது.

வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய CSO விருது - 2022, பயனுள்ள மற்றும் புதுமையான திட்டங்கள் மூலம் தேர்தல் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான நிறுவனங்கள் / தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசாங்கத்திற்கான தேசிய விருது 2022 தேர்தல் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான துறை / நிறுவனம் / பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்துருக்களை 23.11.2022-க்குள் மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்:126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!