நீர்நிலைகளில் உயிரிழப்பினைத் தவிர்க்க பெற்றோர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

நீர்நிலைகளில் உயிரிழப்பினைத் தவிர்க்க பெற்றோர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
X

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Salem news today - நீர்நிலைகளில் உயிரிழப்பினைத் தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பள்ளிப் பாடங்களுக்கு அப்பால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சிகள் உள்ளிட்ட அன்றாடம் பயன்படக் கூடிய வாழ்க்கைக் கல்வி முறைகளை கற்றுத்தர வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளில் உயிரிழப்பினைத் தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குபின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கோடை விடுமுறையையொட்டி பொழுதுபோக்கிற்காக ஆழமான நீர்நிலைகளில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். விலை மதிப்பில்லாத மனித உயிரின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, பெற்றோர் தங்களின் குழந்தைகளை நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்துவதோடு, அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

சுற்றுலா மற்றும் உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்லுதல் உள்ளிட்ட புதிய இடங்களுக்கு குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் செல்லும்போது அருகில் உள்ள நீர்நிலைகளின் ஆழமான பகுதிகளை அறியாமல் நீரில் மூழ்கிவிடும் வகையிலான விபத்துகள் ஏற்பட வாய்ப்பாக உள்ளது குறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நீர்நிலைப் பகுதிகளின் அருகில் குழந்தைகள் செல்லாத வகையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் எடுத்துக் கூறுவதுடன் பள்ளிப் பாடங்களுக்கு அப்பால் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சிகள் உள்ளிட்ட அன்றாடம் பயன்படக் கூடிய வாழ்க்கைக் கல்வி முறைகளையும் கற்றுத்தர வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

மேலும், அலுவலர்கள் ஆழமான ஆற்றுப் பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகில் எச்சரிக்கைப் பலகைகளையும், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதையும் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரக் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் 0427 - 2452202 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்திடவும், ஆபத்தான நீர்நிலைகளால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து பொதுமக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித் துறையினர் அதிக அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்லூரி கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் மாணவ, மாணவியர்களுக்கு சுற்றறிக்கைகள் மூலம் ஆழமான நீர் நிலைகளால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஆபத்தான மற்றும் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டப் பகுதிகளில் குளிப்பவர்கள் மற்றும் நீர் நிலைகளின் அருகில் மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர் வரும் காலங்களில் நீர் நிலைகளில் உயிர் இழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் தேவையான அனைத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கணேஷ்ராம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் வள்ளமுனியப்பன், உதவி செயற்பொறியாளர் குமாரபாளையம் சாமிநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு