முதல்வர் சேலம் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

முதல்வர் சேலம் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
X

சேலத்திற்கு தமிழக முதல்வர் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.

Salem News Today: சேலத்திற்கு தமிழக முதல்வர் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதல்வர் வருகைதரவுள்ளதையொட்டி, சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் விழா முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சேலம் மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் வருகைதந்து சேலம், அண்ணா பூங்கா வளாகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்து, சேலம், பழைய பேருந்து நிலையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்க உள்ளார்.

மேலும், இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 1 இலட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து, அரசு அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறவுள்ளது.

பின்னர், 12.06.2023 காலை 8 மணி அளவில் காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்கள். இதற்குரிய முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் விழா நடைபெறவுள்ள இடத்தினை ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!