Chennai Salem Flight Service Started சென்னை-சேலம் இடையே இன்று முதல் விமான சேவை துவக்கம்

Chennai Salem Flight Service Started  சென்னை-சேலம் இடையே இன்று   முதல் விமான சேவை துவக்கம்
X
Chennai Salem Flight Service Started சென்னை-சேலம் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விமான சர்வீஸ் இல்லாமல் நிறுத்தப்பட்டது. தற்போது இன்று முதல் அது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.


Chennai Salem Flight Service Started

சேலத்திலிருந்து சென்னைக்கு இன்று முதல் தினசரி நேரடி விமான சேவையானது துவங்கப்படுகிறது. மூன்றரை ஆண்டுகளுக்கு பின் இது மீண்டும் துவங்குகிறது.இதற்கு முன்பாக தனியார் விமான நிறுவனமான ட்ரூஜெட் நிறுவனம் சென்னை சேலம் விமான சேவையை நடத்தி வந்தது. ஆனால் திடீரென அது நிறுத்தப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளாகவே சென்னை-சேலத்திற்கு விமான சர்வீஸ் இல்லாத நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது சென்னை -சேலம் இடையே தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது.

Chennai Salem Flight Service Started



சில நாட்களுக்கு முன் அமைச்சர்கள் எம்பி உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பார்வையிட்டு இது சம்பந்தமாக ஆய்வு செய்தனர். அதன் எதிரொலியாக இன்று முதல் விமான சேவையானது பயணிகளுக்கு துவங்கப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்திலிருந்து தினசரி காலை 11.20 மணிக்கு புறப்படும் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானமானது மதியம் 12.30 மணிக்கு சேலத்தினை சென்றடைகிறது. பின்னர் சேலத்திலிருந்து மதியம் 12.50 க்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும்.

Chennai Salem Flight Service Started


சேலம் விமானநிலையத்தினைப் பொறுத்தவரை 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் மட்டுமே இயக்கப்பட உள்ளது. சென்னை- சேலம் ஒரு வழிபயண கட்டணமாக தற்போது ரூ. 2390 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கட்டணத்தில் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story