சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவிலில் 5 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் 2ம் தேதி தேரோட்டம்

சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவிலில் 5 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் 2ம் தேதி தேரோட்டம்
X

அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்.

Salem News Today- சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவிலில் 5 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் 2ம் தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது.

Salem News Today- சேலம் மாவட்டம், சேலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் நகரின் மையப்பகுதியில் திருமணி முத்தாற்றாங்கரையில் கிழக்கு முகமாக அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான சைவத்திருத்தலமாகும். இத்திருக்கோயிலின் மூலவர் சுயம்பு லிங்கத்திருமேனியாகவும், தெற்கு முகமாக அம்பாள் சொர்ணாம்பிகை அருள்பாலிக்கிறார். சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட பெருமை வாய்ந்த தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள சுகவனசுப்ரமணியர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பெருமை வாய்ந்ததாகும்.

பல்வேறு காலத்தில் பல மன்னர்களால் பாதுகாத்துப் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இத்திருக்கோயிலில் கடந்த 27.4.1947 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து 08.02.1981 அன்றும் இதையடுத்து 02.02.1998 அன்றும் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயிலின் திருக்குடமுழுக்கு விழா 24 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.

இந்த நிலையில், பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2ம் தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது. தேர்த்திருவிழா வருகிற 25ம் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29ம் தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது. 25ம் தேதி முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடைப்பெறும்.

மேலும் மாலை வேளையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே அனைத்து பக்கதர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil