பிஎம் கிசான் நிதியுதவி பெற அஞ்சலகங்களில் செல்போன் எண் இணைப்பு
பைல் படம்.
பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் என்பது இந்திய அரசின் 100% நிதியுதவியுடன் கூடிய மத்திய அரசின் திட்டமாகும். இது 1.12.2018 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000/- வருமான ஆதாரமாக மூன்று சம தவணைகளில் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.
திட்ட வழிகாட்டுதல்களின்படி தகுதியுடைய விவசாயக் குடும்பங்களை மாநில அரசும் யூனியன் பிரதேச நிர்வாகமும் அடையாளம் காணும். இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும்.
இந்த திட்டத்திற்கு முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள்/ மாநில அமைச்சர்கள் மற்றும் லோக்சபா/ ராஜ்யசபா/ மாநில சட்டப் பேரவைகள்/ மாநில சட்டப் பேரவைகளின் முன்னாள்/தற்போதைய உறுப்பினர்கள், மாநகராட்சிகளின் முன்னாள் மற்றும் தற்போதைய மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் முன்னாள்,தற்போதைய தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் வருமானவரி செலுத்துபவர்கள் தகுதியானர்கள் கிடையாது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஆண்டொன்டிற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2000 வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பி.எம் கிசான் இணையதளத்தில் அல்லது மொபைல் செயலியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவர்கள் பகுதிக்கு அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை உடனடியாக இணைத்து பயன்பெற வேண்டும். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இவ்வாறு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு https://pmkisan.gov.in/ என்ற இணையதளம் அல்லது பி.காம் கிசான் செயலியில் ஆதார் எண்ணுடன் வரும் ஓடிபி. அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 449 பயனாளிகள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டி இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதற்காக சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் சேலம் அஞ்சல் கோட்டமும், அதன் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியும் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu