பா.ஜ., மகளிரணி போராட்டம் , போலீசார் மிரட்டலால் கலைந்தது

பாரதிய ஜனதா கட்சி மகளிரணியினர் போராட்டத்தை வாபஸ் பெற்ற விவகாரம்
ராசிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை சுவரில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட வந்த பா.ஜ.க மகளிரணியினரை காவல்துறையினர் மிரட்டியதால் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்ததை அடுத்து திட்டமிடப்பட்டது. இந்த விவகாரத்தில் கடந்த 17-ம் தேதி சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, நேற்று நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்காக மகளிரணி உறுப்பினர்கள் மகேஸ்வரி, துர்காதேவி மற்றும் பலர் ராசிபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் "இன்று கைது செய்தால் இரண்டு நாட்கள் சிறையில் தான் இருக்க வேண்டும், பிணை எடுக்க முடியாது" என மிரட்டியதால், பயந்து போன மகளிரணியினர் "போலீசார் கண்டிப்பாக இன்று கைது செய்து விடுவார்கள்" என புலம்பியபடி தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu