/* */

சேலத்தில் இன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

Salem Job fair -சேலம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் இன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் இன்று (05.08.2023) மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு ("கலைஞர் 100”) விழாவை முன்னிட்டு 2023-2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும், சேலம் மாவட்டத்தில் மூன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக, நாளைய தினம் 05.08.2023, சனிக்கிழமை சேலம், சோனா கல்விக் குழும வளாகத்தில் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

குறிப்பாக, இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாடா எலக்ட்ராணிக்ஸ் லிட், வி டெக்னாலஜீஸ், யமாஹா, திரிவேணி கார் நிறுவனம், லோட்டஸ் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம், பே டிஎம், ஆர்.வி.டிரேடர்ஸ், பாரத ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீடு நிறுவனம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாம் சேலம், இரயில்வே சந்திப்பு சாலையில் உள்ள சோனா கல்விக்குழும வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் பங்கேற்கலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வருகைதரும் வேலைநாடுநர்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் வருகின்ற 16.09.2023 மற்றும் 18.10.2023 ஆகிய நாட்களில் முறையே எடப்பாடி மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமினை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 5 Aug 2023 3:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்