சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.96.84 கோடி வங்கிக் கடன்

சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.96.84 கோடி வங்கிக் கடன்
X

சேலம் மாவட்டத்தில் 18,216 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.96.84 கோடி வங்கிக் கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சேலம் மாவட்டத்தில் 18,216 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.96.84 கோடி வங்கிக் கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 18,216 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.96.84 கோடி வங்கிக் கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, தலைமையில், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் 18,216 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.96.84 கோடி வங்கிக் கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 13,799 குழுக்களும் நகர்ப்புர பகுதிகளில் 7,083 குழுக்களும் ஆக மொத்தம் 2,55,943 மகளிரைக் கொண்ட 20,882 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் வங்கிக்கடன் இணைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதில் நடப்பாண்டான 2023-24-ஆம் ஆண்டிற்கு ரூ.1,124 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது வரை ரூ.1,109 கோடி கடனுதவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று ரூ.93.55 கோடி வங்கிக் கடனுதவியும், சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.3.29 கோடியும் ஆக மொத்தம் ரூ.96.84 கோடி நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,518 குழுக்களைச் சார்ந்த சுமார் 18,216 மகளிர் பயன்பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் உமாராணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வாணி ஈஸ்வரி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் / செயலாட்சியர் மீராபாய், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!