மேட்டூர் அருகே யானைகளால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீட்டுக்கு விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அருகே யானைகளால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீட்டுக்கு விவசாயிகள் கோரிக்கை
X

சேதமடைந்த வாழைமரங்கள்.

Salem news today: மேட்டூர் அருகே காட்டு யானைகளால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு இழுப்பிடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Salem news today: மேட்டூர் அருகே காட்டு யானைகளால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு இழுப்பிடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்து அமைந்துள்ள கிராமம் சின்னதண்டா. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே உள்ளது. இப்பகுதியில் வாழை, மஞ்சள், கரும்பு ஆகியவை விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ளது. அருகிலுள்ள வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை, மான், பன்றிகள் ஆகிய காட்டு விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கமாகியுள்ளது.

இந்த நிலையில், விவசாயி மாதேசன் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தின. யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாதேசன், அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அங்கு விரைந்த விவசாயிகள் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதேபோல் கடந்த வாரம் கணேசன் என்பவரது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தது. இதுகுறித்து விவசாயி மாதேசன் கூறுகையில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

சேதமான பயிர்களுக்கு அரசு ஊழிய இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil