ஆம்புலன்சில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஆம்புலன்சில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

அரசு உதவி கேட்டு,அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் ஆம்புலன்சில் வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்தவர் தர்மதுரை(30). கூலி வேலை செய்து வந்த இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த போது வீட்டு சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி தர்மதுரை படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த பொது மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து தர்மதுரைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எழுந்து அமர முடியாத நிலையில் உள்ளார்.

இந்நிலையில் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கூறி, தர்மதுரை அவரது மனைவி மற்றும் பெண் குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மனு அளித்தார். ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளுக்கு மருத்துவம், உணவிற்கு கூட வழியில்லாமல் அவதிப்படுவதாகவும் குடும்ப செலவிற்கு வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்