கொரோனா தொற்று: போலீசாருக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கல்

சேலம் மாவட்டம், ஆத்தூரில், எஸ்.வி.எம். ஆயுர்வேத வைத்திய சாலையின் சார்பில், போலீசாருக்கு கபசுரக்குடிநீர், ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்ச்சி, ஆத்தூர் ஊரக போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.வி.எம். ஆயுர்வேத வைத்தியசாலை டாக்டர் விஷ்ணு கலந்து கொண்டு, கொரோனாவை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து, காவல்துறையினருக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 200 காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, 10 நாட்களுக்கு தேவையான கபசுரக்குடிநீர் மற்றும் ஆயுர்வேத மருந்துகள், ஆத்தூர் டி.எஸ்.பி. இமானுவேல் ஞானசேகரிடம் வழங்கப்பட்டது. இதில், வடசென்னிமலை சித்த வைத்தியர் கே. ஸ்ரீதரன், பொறியாளர் சிவானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!