சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு: அமைச்சர் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு: அமைச்சர் வழங்கல்
X

சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை அமைச்சர் நேரு இன்று வழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் 7,35,058 பயனாளிகளுக்கு தமிழகம் முழுவதும் வழங்கும் பணியினை இன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு 1,000 க்கும் மேற்பட்ட மகளிருக்கு வங்கிப்பற்று அட்டைகளை வழங்கி பேசியதாவது.

மகளிரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணத்திட்டம், உயர்கல்வி கற்க வருகின்ற பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம், பசியோடு பள்ளிக்கு வருகின்ற குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 15.09.2023 காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், 1,06,50,000 மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் முதல்வர் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.06 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான வங்கி பற்று அட்டைகள் இன்றைய தினம் வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டம். சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்றுள்ள பயனாளிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!