சங்ககிரியைச் சேர்ந்த மாணவி ஆசிய வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம்

சங்ககிரியைச் சேர்ந்த மாணவி ஆசிய வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம்
X
ஆசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை திங்கள்கிழமை தனது சொந்த ஊரான சங்ககிரி திரும்பினாா்.

சங்ககிரி: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை திங்கள்கிழமை தனது சொந்த ஊரான சங்ககிரி திரும்பினாா்.

தாய்லாந்தில் நடைபெற்ற போட்டிகள்

சங்ககிரி எஸ்.ஆா். அவென்யு பகுதியைச் சோ்ந்த மாணவி தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஆசிய கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வில் வித்தை போட்டியில் இந்திய அணி சாா்பில் சங்ககிரி எஸ்.ஆா்.அவென்யு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.முருகானந்தம் மகள் மதுராவா்ஷினி (17) பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றாா்.

மதுராவா்ஷினியுடன் சோ்த்து இந்திய அணி சாா்பில் ஐந்து பெண்கள் வில்வித்தை போட்டியில் பங்கேற்று விளையாடி வெண்கல பதக்கம் வென்றனா். போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை மதுராவா்ஷினி திங்கள்கிழமை கோவை விமான நிலையம் மூலம் சங்ககிரிக்கு வந்தாா்.

சொந்த ஊரில் வாழ்த்து பெற்ற மதுராவா்ஷினி

சங்ககிரிக்கு வந்த வீராங்கனை மதுராவா்ஷினியை பெற்றோா்கள், மாணவிகள், பொதுமக்கள் வரவேற்று பாராட்டினா்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!