/* */

மனுக்கள் மீண்டும் வராத வகையில் உரிய தீர்வு: ஆட்சியர் அறிவுறுத்தல்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மனுக்கள் மீண்டும் வராத வகையில் உரிய தீர்வு: ஆட்சியர் அறிவுறுத்தல்
X

மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பிருந்தா தேவி.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று (05.02.2024) நடைபெற்றது.

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வங்கிக்கடன்கள், உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 572 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 24 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 6 Feb 2024 6:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!