சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன்கருதி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல் பாடம்) காலிப்பணியிடத்தினை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதிபெற்ற நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு TET PAPER-II தேர்ச்சி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 12.07.2024-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.109, சேலம் 636 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலை பயிற்சிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலை பயிற்சிகள் பெற ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினிரிடையே நாட்டுப்புறக் கலைகளைக் கொண்டு சேர்க்கவும் என அரசின் அறிவிப்புத் திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு இசைக்கல்லூரிகள், மண்டலக் கலை பண்பாட்டு மையங்கள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் என 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் ஆவின் பால்பண்னை எதிரில், திருப்பதி கவுண்டனூர் சாலை, மண்டலக் கலை பண்பாட்டு மைய வளாகத்தில் தப்பாட்டம், சிலம்பாட்டம், கோல்கால் ஆட்டம், நாடகம் ஆகிய நாட்டுபுறக் கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை 12.07.2024 முதல் நாட்டுப்புறக் கலை பயிற்சிகள் நடைபெறவுள்ளது.
17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பணிக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறலாம்.
இப்பயிற்சி குறித்த விவரங்களையும், பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தினையும் தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஆவின் பால்பண்னை எதிரில், திருப்பதி கவுண்டனூர் சாலை, சேலம் – 636 302 எனும் முகவரியில் நேரிலோ, 0427-2906197 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது 99526 65007 என்ற திட்ட அலுவலரின் எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu