பெண்குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட (டிசம்பர் – 31 ன் படி) பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 24 இல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட விண்ணப்பங்கள் 25.11.2023 வரவேற்கப்படுகின்றன.
13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (டிசம்பர் - 31 ன் படி), பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருத்தல், ஆண்கள் மட்டும் சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்கண்ட அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.1,00,000/-க்கான காசோலை வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.126, சேலம்-636001 முகவரியிலும், தொலைபேசி எண் : 0427-2413 213 என்ற எண்ணிற்கும், மின்னஞ்சல் முகவரி: dswo.slm126@gmail.com தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu