/* */

சமூக சேவகர், பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Salem News Today: சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

சமூக சேவகர், பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம்.

Salem News Today: சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000/ ரொக்கப்பரிசுடன் 10 கிராம் (22 காரட்} எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகின்றன.

சமூக பணியில் ஈடுபடும் இளைய தலைமுறையினருக்கு ஆர்வமூட்டுதல், சமூக சேவையாளர்களின் சவாலான பணியை அங்கீகரித்தல், சமூக பராமரிப்பில் பன்முகத்தன்மை மற்றும் சமவாய்ப்பினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான 'சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது" குறித்த அறிவிப்பு (https/awardstn.gov.in) என்ற அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருதுகளைப் பெற தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருதிற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம். பண்பாடு, கலை அறிவியல். நிருவாகம் ஆகிய துறைகளில் தொண்டாற்றி இருக்க வேண்டும். இத்தகைய சமூக சேவகர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, விருது பெற இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் அறை எண்.120, மாவட்ட சமூக நல அலுவலகம். மாவட்ட ஆட்சியர் வளாகத்தை அணுகி, வரும் 10.06.2023 க்குள் தங்களது கருத்துருக்களை ஒப்படைத்து பயன்பெறவும். தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளப் பக்கத்தில் (https//awards.tn.gov.in) விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Jun 2023 3:57 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  7. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!