சேலம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்ததாவது:

2023ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு திருவள்ளுவர் திருநாளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது.

2023-24ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தொடர்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி, விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆட்சியரக வளாக அறை எண். 109-இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 15.11.2023க்குள் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் 15.11.2023 மாலை 3.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story