மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு சிறப்புவகை நாற்காலி

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு சிறப்புவகை நாற்காலி
X

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு சிறப்புவகை நாற்காலியை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

Salem News Today: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (06.03.2023) நடைபெற்றது.

Salem News Today: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (06.03.2023) நடைபெற்றது.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 281 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 19 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.34,400/- மதிப்பிலான தையல் இயந்திரங்களும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7,500/- மதிப்பிலான பார்வைதிறன் குறைபாடுடையோருக்கான மடக்கு குச்சிகளும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7,500/- மதிப்பிலான ப்ரெய்லி கடிகாரங்களும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,500/- மதிப்பிலான மூளை முடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புவகை நாற்காலியும் என மொத்தம் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.57,900/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு