விவசாயத்தை பாதுகாக்க ஒற்றை மாட்டுவண்டி பயணம்.. சங்ககிரியில் வரவேற்பு

விவசாயத்தை பாதுகாக்க ஒற்றை மாட்டுவண்டி பயணம்.. சங்ககிரியில் வரவேற்பு
X

சங்ககிரியில் சந்திரசூரியனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Salem News Today - இளைஞர்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒற்றை மாட்டுவண்டி விழிப்புணர்வு பயணத்திற்கு சங்ககிரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Salem News Today -சேலம் மாவட்டம், சங்ககிரியை அருகே உள்ள அன். செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசூரியன் (32). பட்டதாரி இளைஞரான இவர் கன்னியாகுமரி முதல் இமயமலை வரை ஒற்றை மாட்டு வண்டியில் நாட்டில் விவசாயம் செழிக்கவும், இளைஞர்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள இவருக்கு சங்ககிரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவர் கடந்த 2010ம் ஆண்டு பி.எஸ்.சி., பட்டப்படிப்பை முடித்தவர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த ஊரிலேயே கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், விவசாயம் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த ஜனவரி 1ம் தேதி கன்னியாகுமரியில் தனது மாட்டு வண்டி பிரச்சார பயணத்தை துவங்கினார். இந்த மாட்டு வண்டி மூலம் 3,600 கி.மீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் தனது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி பயணத்தின் ஒருபகுதியாக அவர் சேலம் மாவட்டம், சங்ககிரிக்கு வந்தடைந்தார்.

கரூரிலிருந்து சங்ககிரிக்கு வந்த அவருக்கு சங்ககிரி திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் தலைமையில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளும் திருச்செங்கோடு சாலையில் வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சந்திரசூரியன் பொதுமக்கள் மத்தியில் விவசாயத்தை காக்க வலியுறுத்திப் பேசினார். அப்போது சங்ககிரி சேரிடபுள் டிரஸ்ட், ஆனந்த், செயலாளர் ராகவன், ஓம்ராம் அறக்கட்டளை, தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளைத்தலைவர் சண்முகம், பசுமை சங்ககிரி நிறுவனம் மரம்பழனிசாமி, அமுதச்சுடர் அறக்கட்டளைதலைவர் சத்தியபிரகாஷ், பராம்பரிய தமிழகம் அமைப்பின் நிறுவனர் செல்வரத்னம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.


பிரச்சார பயணத்தின்போது விருதுநகரில் பேசிய அவர், இன்றைய இளம் தலைமுறையினர் தமது பாரம்பரியமான விவசாயத்தை மறந்து வேலைத்தேடி வெளி மாநிலத்திற்கும் வெளிநாடுகளுக்கும் சென்று அடிமையாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டால் தான் நம் நாடும் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil